கற்பனைத் துண்டுகள் 01

மாய நதி ஒன்று
விண் ஏறிக் கொண்டிருந்தது
மீன்கள் இறக்கைகளை விரித்து
வெளி பறந்து உள் குதித்தன
நட்சத்திரங்கள் தரைதட்டி
தார் சாலைகளில் 
தவழ்ந்துக் கொண்டிருந்தன
வால் நட்சத்திரங்களை
பிடித்துக் கொண்ட குழந்தைகள்
பூக்களை நினைக்கிறார்கள்
கனவின் கோப்புகளை 
கலைந்துக் கொண்டிருக்கிறேன்
நிலவை மட்டும் காண முடியவில்லை

காயத்ரி தமிழன்
20/10/22
10:07


Comments

Popular Posts